ஊதிய நிலுவை பேச்சுவார்த்தையில் உடன்பாடு
மதுபான கிடங்கு சுமைதூக்கும் தொழிலாளர்களின் ஊதிய நிலுவை பேச்சுவார்த்தையில் உடன்பாடுஏற்பட்டுள்ளது.
திருச்சி துவாக்குடி மதுபானக்கிடங்கில் சுமை தூக்கும் தொழிலாளர் மற்றும் ஓட்டுனர்களுக்கு ஊதிய நிலுவைத் தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி திருச்சி மாநகர் மாவட்ட பா.ஜனதா. சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று வருவாய் கோட்டாட்சியர் தவச்செல்வம் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் பா.ஜனதா மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன், நிர்வாகிகள், உறுப்பினர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், ஓட்டுனர்கள் மற்றும் தனியார் டிரான்ஸ்போர்ட் ஒப்பந்ததாரர் கலந்து கொண்டனர். இதில் ஊழியர்களுக்கு பழைய ஊதிய நிலுவைத் தொகையினை முழுமையாக இன்றே வழங்க வேண்டும் என்றும், சரக்கு பெட்டி ஒன்றுக்கு ஊழியர்களிடம் ரூ.1 கேட்கக்கூடாது என்றும், மேற்படி பிரச்சினையில் யாரையும் பணிநீக்கம் செய்யக்கூடாது என்றும், பழைய நடைமுறையை தொடர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்பட்டதால் அனைவரும் கலைந்து சென்றனர்.