சொட்டு நீர் பாசனம் அமைக்க மானியம்


சொட்டு நீர் பாசனம் அமைக்க  மானியம்
x
திருப்பூர்


தாராபுரம் பகுதி சிறு, குறு விவசாயிகளுக்கு சொட்டு நீர்பாசனம் அமைக்க மானியம் வழங்கப்படும் என தோட்டக்கலை உதவி இயக்குனர் எஸ்.திவ்யா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சொட்டுநீர் பாசனம்

தாராபுரம் வட்டாரத்தில் அதிக அளவில் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி

செய்யப்பட்டு வருகிறது. இதில் இருக்கக் கூடிய தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக பரப்பளவில் சாகுபடி செய்து லாபமடைய சொட்டு நீர் பாசன திட்டம் ஆண்டு தோறும்

செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தஆண்டு 228 எக்டர் நிலங்களுக்கு 1 கோடியே 75 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சொட்டு நீர் பாசனம் அமைக்காத விவசாயிகள் தோட்டக்கலைத் துறை மூலம் மானியத்தில் புதிதாக அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே சொட்டு நீர் பாசனம் அமைத்துள்ள விவசாயிகள், அவை அமைக்கப்பட்டு 7 ஆண்டுகள் ஆகியிருந்தால் மானியத்தில் பக்கவாட்டு (லேட்டர்) குழாய்களை புதுபிக்கலாம். இதில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.

கிணறு

புதியதாக ஆழ் துளை கிணறு அமைக்க ரூ.25 ஆயிரம் அல்லது மின் மோட்டருக்கு ரூ.15 ஆயிரம் தரை நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்திட ரூ. 40 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெற விரும்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், நிலவரைபடம், சிறு, குறு விவசாயி சான்றுடன் தாராபுரம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story