பயிர் சாகுபடி தொழில் நுட்ப விளக்க கூட்டம்
பயிர் சாகுபடி தொழில் நுட்ப விளக்க கூட்டம்
பொங்கலூர்
பொங்கலூர் தேவணம்பாளையம் அருகே உள்ள வேளாண்மை அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தில் உலக உணவு தினத்தை முன்னிட்டு மாவட்ட வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் மரபுசார் ஒருங்கிணைப்பு கண்காட்சி மற்றும் பயிர் சாகுபடி தொழில்நுட்ப விளக்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சின்னச்சாமி தலைமை தாங்கினார். துணை இயக்குனர் சுருளியப்பன் முன்னிலை வகித்தார். வேளாண்மை அறிவியல் ஆராய்ச்சி நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் இளையராஜன் வரவேற்றார். இந்த கூட்டத்தில் மாவட்டத்தில் பயிரிடப்படும் பிரதான பயிர்களான நெல், மக்காச்சோளம், பயிர் வகைகள் மற்றும் சிறுதானிய பயிர்கள், பாரம்பரிய மற்றும் உள்ளூர் ரகங்கள் விவசாயிகள் பயன்பெறும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டு அதன் முக்கியத்துவம் விளக்கப்பட்டது. வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை சார்பாக உழவர் உற்பத்தியாளர் குழுக்களால் உற்பத்தி செய்யப்பட்ட நீராபானம் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட உணவு பொருட்கள் ஆகியவை காட்சிப்படுத்துதல் மற்றும் விற்பனைக்கும் வைக்கப்பட்டது. மேலும் இந்த கூட்டத்தில் பாரம்பரிய பயிர் ரகங்களின் முக்கியத்துவம், மதிப்பு கூட்டுதலின் அவசியம், பாரம்பரிய ரகங்களின் சாகுபடி முறைகள், மண் பரிசோதனை ஆகியவை குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் வேளாண்மை துறை அதிகாரிகள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.