விவசாயம் சார்ந்த தொழிற்சாலை அமைக்கப்படும்


விவசாயம் சார்ந்த தொழிற்சாலை அமைக்கப்படும்
x

டெல்டா மாவட்டங்களில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலை அமைக்கப்படும் என்று திருவாரூரில், தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறினார்.

திருவாரூர்

திருவாரூர்;

டெல்டா மாவட்டங்களில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலை அமைக்கப்படும் என்று திருவாரூரில், தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறினார்.

ஆய்வுக்கூட்டம்

திருவாரூர் மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ, போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், நாகை செல்வராஜ் எம்.பி. திருவாரூர் பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஒவ்வொரு துறையாக நடைபெறும் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.பின்னர் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

விவசாயம் சாா்ந்த தொழிற்சாலை

டெல்டா மாவட்டங்களில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலை நிச்சயம் கொண்டு வரப்படும். எண்ணெய், உணவு பதப்படுத்துதல் போன்ற தொழிற்பேட்டை அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.கடந்த ஆட்சியில் தொழில் முதலீட்டாளர் மாநாடு பெயரளவில் நடந்தது. அதில் எந்தவித பணிகளும் சரிவர நடைபெறவில்லை. தி.மு.க. ஆட்சியில் முதலீட்டார் மாநாட்டின் மூலம் நிச்சயம் தமிழகம் மேலும் வளர்ச்சி அடையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன், திட்ட இயக்குநர் சந்திரா, உதவி கலெக்டர்கள் சங்கீதா (திருவாரூர்), கீர்த்தணாமணி (மன்னார்குடி), நகர சபை தலைவர்கள் புவனபிரியா செந்தில், சோழராஜன், நகர் மன்ற உறுப்பினர் பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story