வேளாண் உழவர் உற்பத்தியாளர் விழிப்புணர்வு முகாம்
வேளாண் உழவர் உற்பத்தியாளர் விழிப்புணர்வு முகாம்
தமிழ்நாடு அரசு வேளாண் விற்பனை-வேளாண் வணிகத்துறை, தமிழ்நாடு வணிகத்துறை, தமிழ்நாடு நீர்பாசன வேளாண்மை நவீனமாக்கல் திட்டம், நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கம் ஆகியவை இணைந்து நீடாமங்கலம் அரசு உதவி பெறும் இலக்குமி விலாச நடுநிலைப்பள்ளியில் வேளாண் உழவர் உற்பத்தியாளர் விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு மன்னார்குடி கோட்ட வேளாண் அலுவலர் ரமேஷ் தலைமை தாங்கினார். பல்நோக்கு சேவை இயக்க தலைவர் பத்மஸ்ரீ ராமன், துணைத் தலைவர் ராஜா, பொருளாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேசிய வேளாண் நிறுவன அணி தலைவர் அமுதன் வரவேற்றார். இதில் தென்னிந்திய விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவன தலைவர் விவேகானந்தம், இயற்கை விவசாயி செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு விவசாய குழு அமைத்தல் பற்றி பேசினர். இதில் விவசாயிகள் மற்றும் பல்நோக்கு சேவை இயக்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் செயலாளர் ஜெகதீஷ் பாபு நன்றி உரையாற்றினார். இதேபோல் ரிஷியூர், ஆதனூர், கோவில்வெண்ணி, காளச்சேரி உள்ளிட்டவைகளிலும் வேளாண் உழவர் உற்பத்தியாளர் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.