மானிய விலையில் வேளாண் இடுபொருட்கள்
சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் மானிய விலையில் வேளாண் இடுபொருட்கள் வழங்கப்படுவதாக வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) சாந்தி தெரிவித்துள்ளார்.
சேதுபாவாசத்திரம்:
சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் மானிய விலையில் வேளாண் இடுபொருட்கள் வழங்கப்படுவதாக வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) சாந்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மானிய விலை
சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் 2022-23-ம் ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பள்ளத்தூர், இரண்டாம்புளிக்காடு, கரம்பக்காடு, சேதுபாவாசத்திரம், ரெட்டவயல், அடைக்கத்தேவன், திருவத்தேவன், செம்பியன்மாதேவிபட்டினம், செந்தலைவயல், வாத்தலைக்காடு, ராவுத்தன்வயல், செருபாலாக்காடு உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகள் தேர்தெடுக்கப்பட்டன.
தேர்வு செய்யப்பட்ட ஊராட்சிகளில் உள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் வேளாண் பண்ணை கருவிகள், பேட்டரி ஆப்ரேட் ஸ்பிரேயர்கள் வழங்கப்படுகின்றன.
உளுந்து விதை
மேலும் நெல்லுக்குப்பின் உளுந்து திட்டத்தில் வம்பன்-8, விதை கிராம திட்டத்தின் கீழ் வம்பன்-10, வம்பன்-11 போன்ற சான்று பெற்ற உளுந்து விதைகளும் வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் மானிய விலையில் வழங்கப்படுகிறது.
எனவே விவசாயிகள் ஆதார் அட்டை நகல் மற்றும் தொலைபேசி எண்களுடன் அந்தந்த பகுதி உதவி வேளாண்மை அலுவலரை அணுகி இணைய வழி உழவன் செயலில் பதிவு செய்து இடுபொருட்களை மானியத்தில் வேளாண்மை விரிவாக்க மையம் மூலம் பெற்று பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.