தூத்துக்குடியில்95விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்கள்:அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினர்


தூத்துக்குடியில்95விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்கள்:அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினர்
x
தினத்தந்தி 5 Sept 2023 12:15 AM IST (Updated: 5 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில்95விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்களை அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் 95 விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்களை அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினர்.

வேளாண் எந்திரம்

தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை அலுவலகத்தில் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட கிராமங்களைச் சார்ந்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண்மை எந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்கள் வழங்கும் விழா நேற்று நடந்தது.

விழாவுக்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தங்கினார். எம்.எல்.ஏ.க்கள் எம்.சி.சண்முகையா (ஓட்டப்பிடாரம்), ஜி.வி.மார்க்கண்டேயன் (விளாத்திகுளம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண்மை பொறியியல் பிரிவு செயற்பொறியாளர் கிளாட்வின் இஸ்ரேல் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சரகள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு, 95 விவசாயிகளுக்கு ரூ.77 லட்சத்து 35 ஆயிரம் மானியத்தில் பவர் டில்லர்கள், விசை களையெடுப்பான் கருவிகளை வழங்கினர்.

அமைச்சர் கீதாஜீவன்

விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில், கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னையில் முதல்-அமைச்சர் தலைமையில் நடந்த விழாவில், தமிழ்நாடு முழுவதும் 4 ஆயிரத்து 200 விவசாயிகளுக்கு பவர்டில்லர்கள் மற்றும் களையெடுக்கும் கருவிகள் வழங்கப்பட்டது. இதில் ஆதிதிராவிடர்களுக்கு ரூ.80 ஆயிரமும், பிற்படுத்தப்பட்டோருக்கு ரூ.70 ஆயிரமும் மானியம் வழங்கப்படுகிறது. இந்த வாகனம் பல்நோக்கு பயன்பாடு உடையது. இதனை வேளாண் அதிகாரிகளிடம் கேட்டு நீங்கள் பயன்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும். கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பனை, வாழை ஆராய்ச்சி திட்டங்களை முதல்-அமைச்சர் அறிவித்து உள்ளார். இதனால் விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்பங்கள் கிடைக்கும், என்றார்.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

விழாவில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில், தமிழக முதல்-அமைச்சர் விவசாய தொழிலை வலு உள்ளதாக மாற்றுவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். விவசாயத்துக்கு கடந்த காலங்களில் இல்லாத வகையில் வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் அறிவித்தார். விவசாய கடன் தள்ளுபடி செய்து உள்ளார். மானியத்தில் உரம் வழங்குவது, விவசாயிகளுக்கு பவர் டில்லர் வழங்குவதன் மூலம் சிறு விவசாயிகளின் அடிப்படை தேவைகளை முதல்-அமைச்சர் பூர்த்தி செய்து உள்ளார், என்றார்.

கலந்து கொண்டவர்கள்

விழாவில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியன், உதவி செயற்பொறியாளர்கள் ஜெகவீரபாண்டியன், செவ்வேல், சங்கரநாராயணன், தி.மு.க. மாநில வர்த்தகர் அணி துணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட கவுன்சிலர் செல்வக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story