கல்குளம்-விளவங்கோடு தாலுகா வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் இடைநீக்கம்


கல்குளம்-விளவங்கோடு தாலுகா வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் இடைநீக்கம்
x

கல்குளம்-விளவங்கோடு தாலுகா வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் நாஞ்சில் டொமினிக் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

கல்குளம்-விளவங்கோடு தாலுகா வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் நாஞ்சில் டொமினிக் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கூட்டுறவு விற்பனைசங்க தலைவர்

கல்குளம் -விளவங்கோடு தாலுகா வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம் மார்த்தாண்டம் பம்மத்தில் உள்ள சொந்த கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த சங்கத்தின் கீழ் 70 ரேஷன் கடைகள் உள்ளதுடன் 80 பணியாளர்களும் உள்ளனர். இந்த சங்க தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த நாஞ்சில் டொமினிக் செயல்பட்டு வந்தார்.

இந்த சங்கத்தில் உறுப்பினராக சேர அதற்கான படிவம் எண் 16 மற்றும் 17 ஐ பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் கட்டணம் ரூ.110 வீதம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். பின் நிர்வாக குழு கூட்டத்தில் விண்ணப்பங்கள் முறையாக பரிசீலனை செய்து தகுதியான விண்ணப்பதாரர்கள் உறுப்பினராக சேர்க்கப்பட வேண்டும்.

இடைநீக்கம்

ஆனால் இந்த நடைமுறைகளை பின்பற்றாமல் 689 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் பணம் செலுத்தியதற்கான கையொப்பமும் இல்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.

அதைத் தொடர்ந்து புகார்கள் மீது விசாரணை நடத்திய துணை பதிவாளர் சந்திரசேகரன் நாஞ்சில் டொமினிக்கை 6 மாத காலத்திற்கு சங்கத் தலைவர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து நேற்று நடைபெறுவதாக இருந்த சங்க நிர்வாக குழு கூட்டம் மாற்றி வைக்கப்பட்டுள்ளது.


Next Story