சிவகிரி, கோபியில் ரூ.13 லட்சத்துக்கு விவசாய விளைபொருட்கள் ஏலம்


சிவகிரி, கோபியில் ரூ.13 லட்சத்துக்கு விவசாய விளைபொருட்கள் ஏலம்
x

சிவகிரி, கோபியில் ரூ.13 லட்சத்துக்கு விவசாய விளைபொருட்கள் ஏலம் போனது.

ஈரோடு

சிவகிரி, கோபியில் ரூ.13 லட்சத்துக்கு விவசாய விளைபொருட்கள் ஏலம் போனது.

சிவகிரி

சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நிலக்கடலை ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் 498 மூட்டைகளில் நிலக்கடலையை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இது கிலோ ஒன்று குறைந்தபட்ச விலையாக 58 ரூபாய் 20 காசுக்கும், அதிகபட்ச விலையாக 67 ரூபாய் 50 காசுக்கும் என மொத்தம் 10 லட்சத்து 26 ஆயிரத்து 618 ரூபாய்க்கு ஏலம் போனது.

கோபி

இதேபோல் கோபியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு கோபி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் 75 மூட்டைகளில் கொப்பரை தேங்காய்களை கொண்டு வந்திருந்தனர். இது கிலோ ஒன்று குறைந்தபட்ச விலையாக 83 ரூபாய் 68 காசுக்கும், அதிகபட்ச விலையாக 84 ரூபாய் 9 காசுக்கும் என மொத்தம் 2 லட்சத்து 72 ஆயிரத்து 768 ரூபாய்க்கு ஏலம் போனது.

சிவகிரி, கோபி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் விவசாய விளைபொருட்கள் ரூ.12லட்சத்து 99 ஆயிரத்து 386-க்கு விற்பனை ஆனது.


Next Story