விவசாய சங்க மாநாடு


விவசாய சங்க மாநாடு
x

கடையத்தில் விவசாய சங்க மாநாடு நடந்தது.

தென்காசி

கடையம்:

தமிழ்நாடு விவசாய சங்கத்தின் தென்காசி மாவட்ட முதல் மாநாடு கடையத்தில் நடந்தது. கணபதி தலைமை தாங்கினார். முன்னாள் வட்டார தலைவர் முருகன் சங்க கொடியை ஏற்றினார். வேல்மயில் பேசினார். தலைவர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். முத்துராம், பொருளாளர் முத்து ராஜன் ஆகியோர் அறிக்கை வாசித்தனர். வேலை அறிக்கையை மாவட்ட செயலாளர் கண்ணன் எடுத்து கூறினார். தொடர்ந்து நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

கூட்டத்தில், கடனாநதி, ராமநதி அணைகளை தூர்வார வேண்டும். அனைத்து குளங்களையும் குடிமராமத்து பணி செய்ய வேண்டும். அரசு நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில துணை தலைவர் விஜய முருகன் மாநாட்டை நிறைவு செய்தார். முடிவில், வட்டார தலைவர் கிரிஸ்டோபர் நன்றி கூறினார்.


Next Story