விவசாய சங்க மாநாடு


விவசாய சங்க மாநாடு
x
தினத்தந்தி 4 Dec 2022 12:15 AM IST (Updated: 4 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

குலசேகரன்பட்டினத்தில் விவசாய சங்க மாநாடு நடைபெற்றது.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட மாநாடு மற்றும் பேரணி நடைபெற்றது. மாவட்ட தலைவர் முத்து தலைமை தாங்கினார். மாவட்டக் குழு உறுப்பினர் நேரு, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலர் ரசல், ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலர் பூமயில், ஏ.ஐ.கே.எஸ். சங்க மாவட்ட செயலர் புவிராஜ், மாவட்ட செயலர் ரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வரவேற்புக்குழு தலைவர் ஆறுமுகம் வரவேற்று பேசினார். மாநில துணைத் தலைவர் பூங்கோதை தொடக்க உரையாற்றினார்.

விவசாய தொழிலாளர்களுக்கு தனித்துறையை உருவாக்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை பேரூராட்சிகளுக்கு விரிவுப்படுத்த வேண்டும். 60 வயதைக் கடந்த விவசாய தொழிலாளர்களுக்கு ஓய்வூதியமாக மாதம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில துணை செயலர் மளைவிளைபாசி நிறைவுரையாற்றினார். வரவேற்புக்குழு செயலர் கந்தசாமி நன்றி கூறினார்.




Next Story