உழவன் செயலி குறித்து வேளாண் மாணவிகள் விளக்கம்


உழவன் செயலி குறித்து வேளாண் மாணவிகள் விளக்கம்
x
தினத்தந்தி 22 Jan 2023 12:15 AM IST (Updated: 22 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

உழவன் செயலி குறித்து வாசுதேவநல்லூர் வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளித்தனர்.

தென்காசி

அம்பை:

வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் ஊரக கிராமப்புற வேளாண் அனுபவ பாடத்திற்காக அம்பை வட்டார பகுதியில் 75 நாட்கள் முகாமிட்டுள்ளனர். ஊர்க்காட்டில் வேளாண்மை கல்லூரி மாணவிகள் உழவன் செயலி குறித்தும், அதன் நன்மைகள் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர். பயிர் சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள், வானிலை முன்னறிவிப்பு, தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் மானிய திட்டங்கள், விளைச்சல் அதிகரிக்கும் தொழில்நுட்பங்கள் போன்று பல்வேறு இடங்களுக்கு சென்று தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் மற்றும் விளைபொருட்களுக்கு லாபகரமான விலை கிடைப்பதற்கான வழிமுறைகளை விவசாயிகளின் செல்போன் மூலமாக வழங்குவதே உழவன் செயலியின் முக்கிய நோக்கம் என்றும் அவர்கள் விளக்கி கூறினர்.


Next Story