சின்னசேலம் அருகே விவசாயிகளுக்கு வேளாண் பயிற்சி


சின்னசேலம் அருகே விவசாயிகளுக்கு வேளாண் பயிற்சி
x
தினத்தந்தி 13 March 2023 12:15 AM IST (Updated: 13 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சின்னசேலம் அருகே விவசாயிகளுக்கு வேளாண் பயிற்சி அளிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்,

சின்னசேலம் அருகே காள சமுத்திரத்தில் இயங்கும் வேளாண் அறிவியல் நிலையத்தில் விவசாயிகளுக்கு வேளாண் பயிற்சி மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு வேளாண் அறிவியல் நிலைய இணை பேராசிரியர் ஷர்மிளா பாரதி தலைமை தாங்கினார். அகில இந்திய வானொலி நிலைய பண்ணை இல்ல பிரிவின் அமைப்பாளர் மயிலாடுதுறை செந்தில்குமார், புதுச்சேரி மண்டலம் நபார்டு வங்கியின் பொது மேலாளர் பாலமுருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சேலம் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் இளங்கோ அங்கக வேளாண்மையின் முக்கியத்துவம் குறித்து விளக்கி பேசினார். கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆய்வாளர் நித்யா, விழுப்புரம் மாவட்டம் வேளாண்துறை லாவண்யா ஆகியோர் விவசாயிகளுக்கு வேளாண் விளக்க திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தனர். தொடர்ந்து விவசாயிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதில் ஈயனூர், சிறுவங்கூர், அனுமனந்தல், மூங்கில்பாடி, நைனார்பாளையம், சின்னசேலம், ஆலத்தூர், பெருவங்கூர், சோமன்டார்குடி மற்றும் காளசமுத்திரம் உள்ளிட்ட கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர். முடிவில் காளசமுத்திரம், வேளான் அறிவியல் நிலைய விஞ்ஞானி திருநாவுக்கரசு நன்றி கூறினார்.


Next Story