விவசாய சங்க மாநில மாநாட்டு விளக்க பேரணி


விவசாய சங்க மாநில மாநாட்டு விளக்க பேரணி
x

விவசாய சங்க மாநில மாநாட்டு விளக்க பேரணி

நாகப்பட்டினம்

தமிழ்நாடு விவசாய சங்கத்தின் 30-வது மாநில மாநாடு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாகையில் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நாகை புத்தூர் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வரலாற்று தலைவர்களின் கண்காட்சி பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாநில மாநாட்டு விளக்க பேரணி நாகை அருகே புத்தூர் ரவுண்டானா பகுதியிலிருந்து நேற்று மாலை தொடங்கியது. பேரணியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் மாரிமுத்து தொடங்கி வைத்தார். இதில் தமிழ்நாடு விவசாய சங்க மாநிலத்தலைவர் சண்முகம், நாகைமாலி எம்.எல்.ஏ., மாநில செயலாளர் சாமிநடராஜன் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து விவசாய சங்கத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்த பேரணியில் கலந்துகொண்டவர்கள் தாராளமய கொள்கையை தகர்த்தெறிவோம், மக்களுக்கான மாற்று பொருளாதார கொள்கையை வளர்தெடுப்போம் என்ற வாசகங்கள் அடங்கிய பேனர்களை ஏந்தியவாறு சென்றனர். பேரணி முக்கிய வீதிகள் வழியாக நாகை அவுரித்திடலுக்கு வந்தடைந்தது. அங்கு மாநாட்டை விளக்கி பொதுக்கூட்டம் நடந்தது.


Related Tags :
Next Story