விவசாய தொழிலாளர் சங்க கூட்டம்
விவசாய தொழிலாளர் சங்க கூட்டம்
கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூரில் தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி, தமிழக கட்டிடத் தொழிலாளர்கள் மத்திய சங்கம், அமைப்பு சாரா தொழிலாளர்கள் மத்திய சங்கம் திருவாரூர் மேற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில துணை தலைவர் சேகர் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் முத்துகிருஷ்ணன், மாவட்ட துணை தலைவர் மாரியப்பன், மாவட்ட இளைஞரணி செயலாளர் பக்கிரிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில தலைவர் பொன்குமார் கலந்து கொண்டு அரசின் நலத்திட்ட உதவிகள், வாரியம் செயல்பாடுகள் குறித்து பேசினார். கூட்டத்தில் மணல் குவாரி அமைத்து நியாயமான விலையில் மணல் கிடைக்க அரசு ஆவண செய்ய வேண்டும். கட்டுமான பொருட்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக மாவட்ட செயலாளர் ஆறுமுகம் வரவேற்றார். முடிவில் முன்னாள் நகர செயலாளர் ராகவன் நன்றி கூறினார்.