விவசாய தொழிலாளர் சங்கத்தினர் நகல் எரிப்பு போராட்டம்


விவசாய தொழிலாளர் சங்கத்தினர் நகல் எரிப்பு போராட்டம்
x

கடலூர், புவனகிரியில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்

ஒன்றிய மோடி அரசின் கார்ப்பரேட் ஆதரவு பட்ஜெட்டை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் தமிழகம் முழுவதும் நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கடலூரில் நேற்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பிரகாஷ், விவசாய சங்க ஒன்றிய தலைவர் கடவுள், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் வைத்திலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர் ஜவான் பவன் சாலையில் பட்ஜெட் குறித்த நகலை எரித்து, பட்ஜெட்டுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் தட்சிணாமூர்த்தி, ராஜேஷ் கண்ணன், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, நெல்லிக்குப்பம் செயலாளர் ராமானுஜம், பழனி, பாண்டுரங்கன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புவனகிரி

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஒன்றிய மோடி அரசின் கார்ப்பரேட் ஆதரவு பட்ஜெட்டை கண்டித்து நகல் எரிப்பு போராட்டம் நடந்தது. இதற்கு தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட பொருளாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்

காளி, கோவிந்தராசு, சதானந்தம், சாம்பமூர்த்தி, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் மணி, ஒன்றிய தலைவர் சிவாஜி, கலைவாணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஒன்றியஅரசின் பட்ஜெட் நகலை தீ வைத்து எரித்தனர்.


Next Story