உடன்குடியில்விவசாய தொழிலாளர் சங்க மாநாடு


உடன்குடியில்விவசாய தொழிலாளர் சங்க   மாநாடு
x
தினத்தந்தி 18 Oct 2022 12:15 AM IST (Updated: 18 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

உடன்குடியில்விவசாய தொழிலாளர் சங்க மாநாடு நடந்தது.

தூத்துக்குடி

உடன்குடி:

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் உடன்குடி ஒன்றிய மாநாடு நடைபெற்றது. உடன்குடியில் நடந்த இந்த மாநாட்டிற்கு ஒன்றிய தலைவர் நேரு தலைமை தாங்கினார். பாண்டி வரவேற்று பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உடன்குடி ஒன்றிய செயலாளர் வே.ஆறுமுகம் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் பா.கந்தசாமி, மாவட்டச் செயலாளர் கு. ரவீந்திரன் ஆகியோர் பேசினர். மாநாட்டில் புதிய தலைவராக ஆதிநாராயணன், செயலாளராக கந்தசாமி, பொருளாளராக சக்திவேல், துணைத்தலைவராக அ.பேச்சியம்மாள், துணைச் செயலாளராக நேரு உள்ளிட்ட 10 பேர் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில் உடன்குடி ஒன்றியத்தில் நிலத்தடி நீரின் உப்பு நீர் தன்மையை மாற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் 100 நாள் வேலைக்கு கூலி ரூ.284-ஐ முழுமையாக வழங்கவும், 100 நாள் வேலையை 150 நாளாக உயர்த்தவும் வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆதிநாராயணன் நன்றி கூறினார். மாநாட்டில் விவசாய தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story