ஈரோடு மாவட்டத்தில் 60 கிராம ஊராட்சிகளில் ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித்திட்ட தொடக்கவிழா- குமாரவலசில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் பங்கேற்பு


ஈரோடு மாவட்டத்தில் 60 கிராம ஊராட்சிகளில் ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித்திட்ட தொடக்கவிழா- குமாரவலசில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் பங்கேற்பு
x

ஈரோடு மாவட்டத்தில் 60 கிராம ஊராட்சிகளில் ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித்திட்ட தொடக்க விழா நடந்தது. குமாரவலசு ஊராட்சியில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி கலந்து கொண்டார்.

ஈரோடு

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் 60 கிராம ஊராட்சிகளில் ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித்திட்ட தொடக்க விழா நடந்தது. குமாரவலசு ஊராட்சியில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி கலந்து கொண்டார்.

வளர்ச்சித்திட்டம்

தமிழ்நாடு முழுவதும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித்திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார். இதில் ஈரோடு மாவட்டத்தில் 60 கிராம ஊராட்சிகளில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

காணொலி மூலம் இந்த கிராம மக்கள் முதல்-அமைச்சர் தொடங்கி வைத்த நிகழ்ச்சியை பார்த்தனர். அதுமட்டுமின்றி, 60 ஊராட்சிகளிலும் உள்ள விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. அதன்படி மொத்தம் 13 ஆயிரத்து 724 பேருக்கு ரூ.35 லட்சத்து 59 ஆயிரத்து 354 மதிப்பிலான உதவிப்பொருட்கள் வழங்கப்பட்டன.

சென்னிமலை

ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட குமாரவலசு ஊராட்சியில் நடந்த நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி கலந்து கொண்டார். இங்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை ஆகியவை சார்பில் 233 விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மொத்தம் ரூ.6 லட்சத்து 43 ஆயிரத்து 679 மதிப்பில் நெட்டை தென்னங்கன்றுகள், பயறு விதைகள், கைத்தெளிப்பான், விசைத்தெளிப்பான், வீட்டு தோட்டத்துக்கான தளைகள், நெகிழி கூடைகள், ஆழ்துளை கிணறு அமைக்க பணி உத்தரவு ஆகியவை வழங்கப்பட்டன. நிகழ்ச்சியையொட்டி நடமாடும் மண் பரிசோதனை நிலையம் மூலம் மண் பரிசோதனை மற்றும் பாசனநீர் ஆய்வு முகாம் நடத்தப்பட்டது.

கலெக்டர் இந்த முகாமை பார்வையிட்டதுடன், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சிதிட்டத்தில் வேளாண்மை-உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண் பொறியியல் துறை, வருவாய்த்துறை, கால்நடைத்துறை, கைத்தறி-கைவினை பொருட்கள் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து மேற்கொள்ளும் வளர்ச்சித்திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துக்கூறினார்.

அதிகாரிகள்

இந்த நிகழ்ச்சியில் ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம், துணை மேயர் வி.செல்வராஜ், ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லி.மதுபாலன், இணை இயக்குனர்கள் சின்னசாமி (வேளாண்மை-உழவர் நலத்துறை), பழனிவேல் (கால்நடை பராமரிப்புத்துறை), துணை இயக்குனர்கள் பி.தமிழ்ச்செல்வி (தோட்டக்கலைத்துறை), அசோக் (வேளாண்துறை), சண்முகசுந்தரம் (வேளாண் விற்பனை மற்றும் வணிகம்), சிவகுமார் (நுண்ணீர் பாசனம்), செயற்பொறியாளர் விஸ்வநாதன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முருகேசன், சென்னிமலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் டி.காயத்திரி இளங்கோ, குமாரவலசு ஊராட்சி தலைவர் வி.பி.இளங்கோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் அருகே உள்ள உக்கரத்தில் கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. சத்தி ஊராட்சி ஒன்றிய தலைவர் கே.சி.பி.இளங்கோ 5 விவசாயிகளுக்கு மானிய விலையில் காய்கறி விதை தொகுப்புகளை வழங்கினார். இதில் ஊராட்சி தலைவர் முருகேஷ், துணைத்தலைவர் புனிதா, கவுன்சிலர்கள் சம்பத்குமார், சரோஜா செந்தில்குமார், கோணமலை ஊராட்சி தலைவர் குமரேசன் என்கிற செந்தில்நாதன், உக்கரம் ஊராட்சி முன்னாள் தலைவர் ராம்கருணாநிதி, அசோகன் மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள்.

அந்தியூர்

அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் மைக்கேல் பாளையம் ஊராட்சியில் கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவி வழங்கும் விழா ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. விழாவில் கலந்து கொண்டு, 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பேட்டரியில் இயங்கக்கூடிய பூச்சி மருந்து தெளிப்பான், கைத்தெளிப்பான் உள்ளிட்ட உபகரணங்களையும், விதைகளையும் வழங்கினார்.

இதேபோல் அந்தியூர் ஒன்றியத்தில் பர்கூர், வேம்பத்தி, பிரம்மதேசம் ஆகிய ஊராட்சிகளில் 150-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு மைக்கேல்பாளையம் ஊராட்சி தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். கோபி உதவி செயற்பொறியாளர் ரமேஷ்பாபு. வேளாண் அலுவலர் ஆசைத்தம்பி, உதவி அலுவலர்கள் மூர்த்தி, நவநீதன், மணிகண்டன், மைக்கேல்பாளையம் ஊராட்சி தலைவர் சக்திவேல் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள். விவசாயத்துறை அதிகாரிகள் விழாவில் கலந்துகொண்டார்கள்.

பெருந்துறை

கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பெருந்துறை ஒன்றியம் திருவாச்சி ஊராட்சியைச் சேர்ந்த 235 விவசாயிகளுக்கு, நலத்திட்ட உதவிகள் நேற்று வழங்கப்பட்டன. திருவாச்சி அரசு தொடக்கப் பள்ளியில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் சோளிபிரகாஷ் தலைமை தாங்கி, விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். திருவாச்சி ஊராட்சியைச் சேர்ந்த 5 விவசாயிகளுக்கு பூச்சி மருந்து விசைத்தெளிப்பான்களும், 5 விவசாயிகளுக்கு கையால் இயக்கப்படும் பூச்சி மருந்து தெளிப்பான்களும் வழங்கப்பட்டன. மேலும், வீடு ஒன்றுக்கு தலா 3 தென்னங்கன்றுகள் வீதம், ஊராட்சியில் உள்ள 200 குடும்பங்களுக்கு மொத்தம் 600 தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் திருவாச்சி ஊராட்சி தி.மு.க. செயலாளர் எஸ்.என்.ரங்கசாமி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் சக்திவேல், வேளாண்மைத்துறை அலுவலர்கள் குழந்தைவேல், ரமேஷ், பிரபு, கந்தசாமி உள்பட பலர் கலந்துகொண்டார்கள்.


Related Tags :
Next Story