வேளாண்மை உதவி அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை
வேளாண்மை உதவி அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
ஈரோடு மூலப்பாளையம் பாரதிபாளையம் முதல் வீதியை சேர்ந்தவர் சுரேந்திரன் (வயது 58). ஈரோடு சம்பத்நகர் உழவர் சந்தையில் வேளாண்மை உதவி அதிகாரியாக பணியாற்றி வந்த அவர் கடந்த செப்டம்பர் மாதம் விருப்ப ஓய்வு பெற்றார். இவருடைய மனைவி குமுதா (58). அந்தியூர் அருகே செம்புளிச்சாம்பாளையம் அரசு மேல்நிலை பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.
இந்த நிலையில் சுரேந்திரன் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததால் மனஉளைச்சலுடன் காணப்பட்டார். கடந்த 9-ந் தேதி இரவில் சுரேந்திரன் வீட்டின் படுக்கை அறைக்குள் தூங்க சென்றார். மற்றொரு அறையில் தூங்கிக்கொண்டு இருந்த குமுதா நேற்று முன்தினம் காலையில் எழுந்து பார்த்தார். அப்போது சுரேந்திரன் தூக்கில் தொங்கி கொண்டு இருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சுரேந்திரனை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சுரேந்திரன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.