ரூ.76 லட்சத்தில் வேளாண் மைய கட்டிடங்கள்
திருவெண்காடு, காரைமேடு பகுதிகளில் ரூ.76 லட்சத்தில் வேளாண் மைய கட்டிடங்கள் ரூ.76 லட்சத்தில் வேளாண் மைய கட்டிடங்கள்
திருவெண்காடு:
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் திருவெண்காடு மற்றும் காரைமேடு ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகளின் நலன் கருதி ரூ.76 லட்சம் மதிப்பீட்டில் வேளாண் அலுவலகம் மற்றும் விதை விற்பனை மையம் ஆகியவை அடங்கிய வேளாண்மை மைய கட்டிடங்கள் கட்டப்பட்டன. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு வேளாண்மை துறை துணை இயக்குனர் மதியரசன் தலைமை தாங்கினார். சீர்காழி ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன், துணைதலைவர் உஷா நந்தினி பிரபாகரன், சீர்காழி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பஞ்சு குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சீர்காழி வேளாண்மை துறை உதவி இயக்குனர் ராஜராஜன் வரவேற்றார் இதில் எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு கட்டிடங்களை திறந்து வைத்தும், குத்துவிளக்கு ஏற்றியும் பேசினர். இதனைத் தொடர்ந்து விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இதில் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முத்து மகேந்திரன், ரவி, வேளாண் அலுவலர்கள் சேகர், வேதை ராஜன், அலெக்சாண்டர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.