விழுப்புரத்தில் வேளாண்மைத்துறை அமைச்சுப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


விழுப்புரத்தில்    வேளாண்மைத்துறை அமைச்சுப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 Nov 2022 12:15 AM IST (Updated: 19 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் வேளாண்மைத்துறை அமைச்சுப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விழுப்புரம்

புதிதாக ஆரம்பிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு ஆட்சி அலுவலர் பணியிடம் அனுமதிக்க வேண்டும், தோட்டக்கலைத்துறைக்கு ஆட்சி அலுவலர் பணியிடம் அமைக்க வேண்டும், வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்களுக்கு அமைச்சுப்பணியிடம் அனுமதிக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழ்நாடு வேளாண்மைத்துறை அமைச்சுப்பணியாளர் சங்கத்தின் சார்பில் அனைத்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அந்த வகையில் விழுப்புரத்தில் உள்ள மாவட்ட வேளாண் இணை இயக்குனர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் காந்திமதி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மணிமாறன் கோரிக்கை விளக்கவுரையாற்றினார். காந்திநாதன், துணைத்தலைவர் பாரதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் விழுப்புரம் மாவட்ட செயலாளர் எஸ்.சிவக்குமார் சிறப்புரையாற்றினார். மாநில துணைத்தலைவர் பார்த்திபன் நிறைவுரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அமைச்சுப்பணியாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். முடிவில் கிருஷ்ணகுமார் நன்றி கூறினார்.


Next Story