வேளாண்மை விஞ்ஞானி விளக்கம்


வேளாண்மை விஞ்ஞானி விளக்கம்
x

மூலிகை தோட்டம் அமைப்பதன் பயன் குறித்து வேளாண்மை விஞ்ஞானி விளக்கம் அளித்து உள்ளார்.

திருவாரூர்

நீடாமங்கலம்;

மூலிகைத் தோட்டம் அமைப்பதன் பயன் குறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானி மற்றும் இணை பேராசிரியை சோ.கமலசுந்தரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:மூலிகை தாவர வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் மூலிகை பயிர் வாரியம் 57 தாவரங்களை பயிரிடுவதற்கு மானியம் வழங்கி வருகிறது. மூலிகைத் தோட்டம் மூலமாக நாம் வீட்டுக்கு தேவையானஅளவில் அத்தியாவிசிய மூலிகைகளை வளர்க்கலாம். மூலிகை செடிகள் காற்றின் தரத்தை மேம்படுத்துகிறது. இதன் மூலம் சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருக்கவும் உதவுகிறது. பாரம்பரிய மருத்துவ முறைகளை பயன்படுத்தி சிறு சிறு உடல் உபாதைகளை சீர் செய்ய உதவுகிறது. சந்தையில் இருந்து வாங்கப்படும் மூலிகைப் பொருட்களில் பொதுவாக கலப்படம் எளிதில் காணப்படும். எனவே மூலிகைகளை நாம் வீட்டிலேய வளர்க்கும்பொழுது இதை தவிர்க்கலாம்.முடக்கத்தான், வெற்றிலை, திப்பிலி, சித்தரத்தை, வெட்டிவேர், எலுமிச்சைபுல், மெண்தால் துளசி, திருநீற்றுபச்சிலை, இன்சுலின் செடி, சிறுகுறிஞ்சான், கீழாநெல்லி, வல்லாரை, சோற்றுக்கற்றாழை, ரணகள்ளி, இஞ்சி, கருந்துளசி, ஓமவள்ளி, மிளகு, பிரண்டை, மஞ்சள் செடி, புதினா, நீர் பிரம்மி போன்ற செடிகளை வீடிகளில் எளிதாக வளர்க்கலாம். ஒவ்வொரு மூலிகைகளும் நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்கும் உகந்ததாகும். .இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.மூலிகை தோட்டம் அமைப்பதன் பயன் குறித்து வேளாண்மை விஞ்ஞானி விளக்கம் அளித்து உள்ளார்.


Next Story