விவசாயம் செழித்திட வேண்டி யோகாசன நிலையில் உடலில் தீபம் ஏற்றி மாணவர்கள் வழிபாடு
விவசாயம் செழித்திட வேண்டி யோகாசன நிலையில் உடலில் தீபம் ஏற்றி மாணவர்கள் வழிபாடு நடத்தினர்.
தேனி
கார்த்திகை தீபத்திருநாளையொட்டி, விவசாயம் செழித்து, நாடு வளம்பெற, மக்களிடம் சமத்துவம் நிலைத்திட, இளைஞர்களிடம் போதை பழக்கம் ஒழிய வேண்டி கம்பத்தில் உள்ள யோகா பயிற்சி மையத்தில் மாணவ-மாணவிகள் பல்வேறு ஆசன வடிவில் நின்று உடலில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர்.
அப்போது அவர்கள் உத்தித பத்மாசனம், நட்சத்திர ஆசனம், மச்சாசனம், ஒட்டகாசனம், குக் குடாசனம், சிரசாசனம், ஏக பாத ஆசனம், பத்மசிரசாசனம், காகாசனம், ஓம் கார ஆசனம், ஏக பாதசிக்கந்தாசனம் நிலையில் உடலில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர்.
Related Tags :
Next Story