வேளாண் கல்லூரி மாணவிகள் கிராம தங்கல் பயிற்சி
வேளாண் கல்லூரி மாணவிகள் கிராம தங்கல் பயிற்சி
திருப்பூர்
பொங்கலூர்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், தோட்டக்கலைத் துறை மற்றும் அறிவியல் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் 10 பேர் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் பொங்கலூரில் தங்கி உள்ளனர். இந்த மாணவிகள் வேளாண்மை பல்கலைக்கழகத்தின் புதிய தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு அளித்து வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து நடந்த விவசாயிகள் தின விழாவிற்கு பொங்கலூர் வேளாண்மை அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தில் திட்ட ஒருங்கிணைப்பாளர் இளையராஜன் தலைமை தாங்கினார். உதவி பேராசிரியை கவிதா ஸ்ரீ அறுவடைக்கு பின் சார் தொழில்நுட்பம் குறித்து பயிற்சி அளித்தார். மேலும் வேர்க்கடலை மதிப்புக்கூட்டுதல் குறித்து செயல் விளக்கமும் காண்பிக்கப்பட்டது.
Related Tags :
Next Story