மண்மாதிரி சேகரித்த வேளாண் மாணவிகள்
கமுதி அருகே வேளாண் மாணவிகள் மண்மாதிரி சேகரித்தனர்.
ராமநாதபுரம்
கமுதி,
கமுதி அருகே முத்துராமலிங்கம் கிராமத்தில் முத்துராமலிங்கபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் விவசாயிகளுக்கு கோழி வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். இதில் வட்டார தொழில்நுட்ப குழு ஒருங்கிணைப்பாளர் பிரேமா, முத்துராஜ் ஆகியோர் பயிற்சி அளித்தனர். பின்னர் கிராமத்தில் உள்ள விளைநிலங்களுக்கு சென்ற மாணவிகள் மண் மாதிரிகள் எடுத்து அந்த கிராமத்தில் விளையக்கூடிய பயன்கள் குறித்து செயல் விளக்கம் அளித்தனர்.
Related Tags :
Next Story