அதிமுக ஒன்றிணைவதே நோக்கம்: நான் எல்லோருக்கும் பொதுவான தலைவர்: சசிகலா
சாதி பார்த்திருந்தால் கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்த எடப்பாடி பழனிசாமியை முதல் அமைச்சராக ஆக்கியிருக்க மாட்டேன் என்று சசிகலா கூறினார்.
சென்னை,
எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளைத் தான் ஊடகங்கள் தினமும் பார்த்துக் கொண்டுள்ளன. பேச வேண்டிய நேரத்தில் எதை பேச வேண்டுமோ, மக்களுக்கு எதை எடுத்துக் கூற வேண்டுமோ, அதை பேச எதிர்க்கட்சிகள் தவறுகின்றன என்பதுதான் என்னுடைய கருத்து.
ஏப்.24ல் திருச்சியில் நடைபெறவுள்ள ஓபிஎஸ் மாநாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "எனக்கு அழைப்பு கொடுத்தால், ஊடகங்களிடம் சொல்லாமலா சென்றுவிடப் போகிறேன். அழைப்பு வரட்டும். அதன்பின்னர் என்ன நடக்கிறது என்று பாருங்கள்" என்றார்.
ஓபிஎஸ்ஸின் அரசியல் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "எல்லோருக்கும் என்னைப்பற்றி புரிந்துகொள்ள ஒரு காலம் நேரம் வரும். அந்த காலநேரம் வரும்போது எல்லோருமே புரிந்துகொள்வார்கள். இது ஓபிஎஸ்ஸுக்கு மட்டுமல்ல, நான் பொதுவாக சொல்கிறேன்" என்றார்.
Related Tags :
Next Story