ஆத்தங்கரை பள்ளிவாசலில் அ.தி.மு.க. அவை தலைவர் தமிழ்மகன் உசேன் சிறப்பு பிரார்த்தனை
ஆத்தங்கரை பள்ளிவாசலில் அ.தி.மு.க. அவை தலைவர் தமிழ்மகன் உசேன் சிறப்பு பிரார்த்தனை செய்தார்.
அ.தி.மு.க. அவைத்தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்ட பிறகு தமிழ்மகன் உசேன் நேற்று நெல்லைக்கு வருகை தந்தார். அவருக்கு சந்திப்பு ரெயில் நிலையத்தில் நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேச ராஜா தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன், மாவட்ட துணைச் செயலாளர் கவிதா பாலசுப்பிரமணியன், கவுன்சிலர் சந்திரசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து தமிழ்மகன் உசேன் திசையன்விளை அருகே உள்ள ஆத்தங்கரை பள்ளிவாசலுக்கு சென்று சிறப்பு பிரார்த்தனை செய்தார். முன்னதாக அவருக்கு ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் அந்தோணி அமலராஜா தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர் ஏ.கே.சீனிவாசன், எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் நாராயண பெருமாள், மாவட்ட மகளிரணி செயலாளர் ஜான்சிராணி முருகானந்தம், கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.பி.கே.செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.