அதிமுக எடுக்கும் முடிவுகள் அனைத்தும் வழக்கில் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது - சென்னை ஐகோர்ட்
அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை ஜூன் 8-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சென்னை,
அதிமுக பொதுக்குழு தீர்மானம், பொதுச்செயலாளர் தொடர்பான ஓபிஎஸ் தரப்பினர் தொடர்ந்த வழக்கு 3-வது நாளாக விசாரணை நடைபெற்றது. இந்தநிலையில், உறுப்பினர் சேர்க்கை, நீக்கம் ஆகியவை பாதிப்பு ஏற்படாதவாறு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க ஓபிஎஸ் கோரிக்கை வைத்தார். அதிமுக பொதுச்செயலாளர், பொதுக்குழு தொடர்பான வழக்கில் இடைக்கால உத்தாவு பிறப்பிக்க ஓபிஎஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
ஓபிஎஸ் தரப்பு வாதம் நிறைவடைந்த நிலையில் வழக்கு விசாரணையை ஜூன் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை ஐகோர்ட்டு. அதிமுக எடுக்கும் முடிவுகள் அனைத்தும் வழக்கில் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story