கர்நாடக சட்டசபை தேர்தலில் ஒரு இடத்தில் அதிமுக போட்டி - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


கர்நாடக சட்டசபை தேர்தலில் ஒரு இடத்தில் அதிமுக  போட்டி - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 19 April 2023 10:57 AM IST (Updated: 19 April 2023 1:25 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடக மாநிலம் புலிகேசி நகர் சட்டமன்றதொகுதியில் அதிமுக போட்டியிடுவதாக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகாவில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்தநிலையில், கர்நாடக மாநிலம் புலிகேசி நகர் சட்டமன்றதொகுதியில் அதிமுக போட்டியிடுவதாக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கர்நாடக மாநில அதிமுக அவைத்தலைவரான அன்பரசனை வேட்பாளராக தேர்வு செய்து எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதிமுக ஆட்சிமன்றக்குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி கர்நாடகாவில் ஒரு தொகுதியில் போட்டியிடுகிறோம். பெங்களூரு அருகே உள்ள புலிகேசி நகர் தொகுதியில் கர்நாடக மாநில அதிமுக தலைவர் அன்பரசன் போட்டியிடுகிறார் என அறிக்கை வெளியிட்டுள்ளது.பாஜக கூட்டணியில் போட்டியிட வாய்ப்பு கேட்டதாக தகவல் வெளியான நிலையில் வேட்பாளரை அறிவித்திருக்கிறது அதிமுக.


Next Story