விஷச்சாராய உயிரிழப்புகள் - கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளிக்க அதிமுக முடிவு


விஷச்சாராய உயிரிழப்புகள் -  கவர்னர்  ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளிக்க அதிமுக முடிவு
x

விஷச்சாராய உயிரிழப்புகள் தொடர்பாக கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளிக்க அதிமுக முடிவு செய்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் இதுவரை விஷச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் இதுவரை 14 பேரும், செங்கல்பட்டில் 8 பெரும் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.இது தொடர்பாக விழுப்புரம் , செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் சாராய விற்பனையில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். மேலும் விழுப்புரம், செங்கல்பட்டு விஷச்சாராய வழக்குகள் அனைத்தும் சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் விஷச்சாராய உயிரிழப்புகள் தொடர்பாக கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளிக்க அதிமுக முடிவு செய்துள்ளது.

இன்று நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விஷச்சாராய உயிரிழப்புகள் தொடர்பாக கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது


Next Story