நீட் தேர்வுக்கு எதிராக அதிமுக எதையும் செய்யவில்லை - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்


நீட் தேர்வுக்கு எதிராக அதிமுக எதையும் செய்யவில்லை - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
x

மதுராந்தகத்தில் கலைஞர் திருவுருவச்சிலை மற்றும் பேனா வடிவிலான சிலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். திறந்து வைத்தார்.

சென்னை,

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் கலைஞர் திருவுருவச்சிலை மற்றும் பேனா வடிவிலான சிலையை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். திறந்து வைத்தார். பின்னர் உரையாற்றிய அவர், விசாரணை அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து பேசினார். அப்போது அவர், " விசாரணை அமைப்புகள் பாஜகவின் அணிகளாக உள்ளன" என்றார்.

மேலும் அவர் கூறியதாவது:-

பாஜக என்ற கட்சியே தமிழ்நாட்டிற்கு தேவையற்றது. எல்லா கட்சிகளிலும் பல அணிகள் உள்ளது. அதேபோல, சி.பி.ஐ, இ.டி (அமலாக்கத்துறை), ஐ.டி போன்ற பல அணிகள் பாஜகவில் உள்ளது. நாங்கள் இடி பார்த்தும் பயப்பட மாட்டோம், மோடியை பார்த்தும் பயப்பட மாட்டோம். நீட் தேர்வுக்கு எதிராக அதிமுக எதையும் செய்யவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story