அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னை,
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அனைத்து தலைமைக் கழகச் செயலாளர்களும், மாவட்டக் கழகச் செயலாளர்களும் பங்கேற்றுள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மதுரையை போன்று ஒவ்வோரு மாவட்டங்களிலும் பொதுக்கூட்டங்கள் நடத்துவது, கட்சியின் வளர்ச்சி பணிகள் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த நிலையில் அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசித்து வருகிறார்.
Related Tags :
Next Story