7-ம் தேதி நடைபெற இருந்த அதிமுக செயற்குழு கூட்டம் ரத்து...!


7-ம் தேதி நடைபெற இருந்த அதிமுக செயற்குழு கூட்டம் ரத்து...!
x
தினத்தந்தி 4 April 2023 11:28 AM IST (Updated: 4 April 2023 12:30 PM IST)
t-max-icont-min-icon

வரும் 7-ம் தேதி நடைபெற இருந்த அதிமுக செயற்குழு கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

சென்னை,

அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக செயற்குழு கூட்டம் 7.4.2023 அன்று நடைபெறும் என ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

ஒருசில காரணங்களால், 7.4.2023 வெள்ளிக் கிழமை அன்று நடைபெறுவதாக இருந்த கழக செயற்குழு கூட்டம் ரத்து செய்யப்படுகிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story