நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு உதவி முகாம்


நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு உதவி முகாம்
x
தினத்தந்தி 21 Sept 2023 12:15 AM IST (Updated: 21 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு அல்லது அறிவிக்கப்படாத விண்ணப்பதாரர்களுக்கென உதவி முகாம்கள் நடத்தப்படுவதாக மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு அல்லது அறிவிக்கப்படாத விண்ணப்பதாரர்களுக்கென உதவி முகாம்கள் நடத்தப்படுவதாக மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மகளிர் உரிமை திட்டம்

தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் கடந்த 15-ந் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அவர்களது வங்கி கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டுள்ளது. பயனாளிகளின் கைபேசி எண்ணிற்கு வங்கியிலிருந்தோ அல்லது ஏதேனும் வங்கி சார்ந்தோ அழைக்கிறோம் என அழைப்பு வந்து ஏதேனும் கடவுச்சொல் அல்லது ஏ.டி.எம் அட்டையின் பின்புறம் உள்ள மூன்று இலக்க எண்ணை கேட்டால் தெரிவிக்க வேண்டாம்.

மேலும் விண்ணப்பிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான குறுஞ்செய்தி கடந்த 18-ந் தேதி முதல் இம்மாத இறுதி வரை அவர்களுடைய கைபேசி எண்ணிற்கு நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்துடன் தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. தகுதியான விண்ணப்பதாரராக இருந்து நிராகரிக்கப்பட்டதாக கருதும் விண்ணப்பதாரர்கள் தங்கள் மேல்முறையீட்டினை அருகில் உள்ள இ-சேவை மையம் வழியாக கட்டணம் ஏதுமின்றி வருவாய் கோட்ட அலுவலருக்கு விண்ணப்பிக்கலாம்.

உதவி முகாம்கள்

இந்த நிலையில் தகுதியான விண்ணப்பதார்களின் நிராகரிப்பிற்கான காரணம் தெளிவாக, அறிந்து கொள்ள விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு அல்லது அறிவிக்கப்படாத விண்ணப்பதாரர்களுக்கென மாவட்ட கலெக்டர் அலுவலகம், மயிலாடுதுறை, தொலைபேசி எண்: 04364-222588, மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம், தொலைபேசி எண்: 04364-222033, சீர்காழி கோட்டாட்சியர் அலுவலகம், தொலைபேசி எண்: 04364-270222, மயிலாடுதுறை தாசில்தார் அலுவலகம், தொலைபேசி எண்: 04364- 222456, குத்தாலம் தாசில்தார் அலுவலகம், கைபேசி எண்: 9943506139, சீர்காழி தாசில்தார் அலுவலகம், தொலைபேசி எண்: 04364-270527, தரங்கம்பாடி தாசில்தார் அலுவலகம், தொலைபேசி எண்: 04364-289439 ஆகிய இடங்களில் அலுவலக நாட்களில் உதவி முகாம்கள் நடைபெற உள்ளது.

எனவே, பொதுமக்கள் தங்கள் விண்ணப்பம் தொடர்பான சந்தேகங்கள், மேல்முறையீடு விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை நேரடியாக அல்லது தொலைபேசி மூலம் தெரிந்துக்கொண்டு மேல்முறையீடு செய்து பயன்படுத்திக்கொள்ளுமாறு அச்செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story