வம்சம் திட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு ரூ.2 ஆயிரம் நிதி உதவி
கர்ப்பிணிகளுக்கு வம்சம் திட்டத்தில் ரூ.2 ஆயிரம் நிதி உதவி அளிக்கப்படும் என கலெக்டர் அருண் தம்புராஜ் கூறினார்.
கர்ப்பிணிகளுக்கு வம்சம் திட்டத்தில் ரூ.2 ஆயிரம் நிதி உதவி அளிக்கப்படும் என கலெக்டர் அருண் தம்புராஜ் கூறினார்.
வம்சம் திட்டம்
நாகை மாவட்டம் கீழ்வேளூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் வம்சம் திட்ட செயல்பாடு குறித்து கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வம்சம் திட்டத்தின்படி கீழ்வேளூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவம் பார்த்துக்கொள்ளும் தாய்மார்களுக்கு ரூ.2 ஆயிரம் நிதி உதவி அல்லது ரூ.2 ஆயிரம் மதிப்பிலான வெள்ளி டம்ளர் வழங்கப்படும் என்ற அறிவிப்பு பெண்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் இந்த ஆஸ்பத்திரியை சுத்தமாக பராமரித்து சிகிச்சை அளித்துவரும் டாக்டர்கள், செவிலியர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.
ரூ.2 ஆயிரம் நிதி உதவி
தமிழ்நாட்டில் நாகை மாவட்டத்தில் மட்டும்தான் வம்சம் திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு தாய் சேய் நல கட்டுப்பாட்டு மையம் மூலம் 24 மணி நேரமும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.
வம்சம் திட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு தமிழக அரசு வழங்கும் ரூ.600 உதவி தொகையுடன் நாகை கலெக்டரின் சிறப்பு நிதியாக ரூ.1,400 கூடுதலாக சேர்த்து ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது மருத்துவ பணிகள் இணை இயக்குனர் ஜோஸ்பின் அமுதா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் மற்றும் டாக்டர்கள், அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.