260 பேருக்கு ரூ.79½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்


260 பேருக்கு ரூ.79½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்
x
தினத்தந்தி 28 Dec 2022 12:15 AM IST (Updated: 28 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தலையாமங்கலத்தில் நடந்த மக்கள் நேர்காணல் முகாமில் 260 பேருக்கு ரூ.79½ லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்.

திருவாரூர்

தலையாமங்கலத்தில் நடந்த மக்கள் நேர்காணல் முகாமில் 260 பேருக்கு ரூ.79½ லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்.

மக்கள் நேர்காணல் முகாம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள தலையாமங்கலம் கிராமத்தில் தலையாயமங்கலம், தென்பாதி, குறிச்சி ஆகிய கிராமங்களுக்கான மக்கள் நேர்காணல் முகாம் நடந்தது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மன்னார்குடி டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் 260 பேருக்கு ரூ.79 லட்சத்து 44 ஆயிரத்து 723 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கோரிக்கைகளுக்கு தீர்வு

தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் மக்கள் நேர்காணல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் பெறப்படும் மனுக்களுக்கு உரிய தீர்வு காணப்படுகிறது. துறை வாரியாக அலுவலர்கள் மக்களின் இருப்பிடத்திற்கே கோரிக்கைகளை கேட்டறிந்து, நலத்திட்டங்களை செயல்படுத்துகிறார்கள். பொதுமக்களிடம் அரசின் நலத்திட்டங்களை கொண்டு சேர்ப்பதற்கு இந்த முகாம் மிகவும் உறுதுணையாக இருக்கிறது. கல்வி உதவித்தொகை, புதுமை பெண் திட்டத்தின் கீழ் உயர்கல்விக்கான உதவித்தொகை உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

தையல் எந்திரங்கள்

போட்டித்தேர்வுகள் எழுதும் மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் சார்பில் இலவச பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த முகாமில் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 7 பேருக்கு ரூ.40 ஆயிரத்து 950 மதிப்பிலான இலவச தையல் எந்திரங்கள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுப்பான்மையினர் நலத்துறையின் சார்பில் 7 பேருக்கு ரூ.37 ஆயிரத்து 431 மதிப்பிலான இலவச சலவைப்பெட்டி, தையல் எந்திரங்கள், வருவாய்த்துறையின் சார்பில் 60 பேருக்கு ரூ.7 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான உதவித்தொகை, 67 பேருக்கு ரூ.10 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பீட்டில் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது.

புதிய வீடு

ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் 10 பேருக்கு ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் புதிய வீட்டிற்கான சாவியும், 26 பேருக்கு ரூ.44 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய வீட்டிற்கான பணி ஆணையும் வழங்கப்பட்டுள்ளது. வேளாண்மைத்துறையின் சார்பில் 10 பேருக்கு நெல் நூண்ணூட்டம், உயிர் உரம் உள்ளிட்ட இடுபொருட்கள் உள்பட பல்வேறு நிலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

முகாமில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பாலச்சந்திரன், உதவி கலெக்டர் கீர்த்தனா மணி, ஒன்றியக்குழு தலைவர் மனோகரன், ஒன்றியக்குழு உறுப்பினர் மகாலட்சுமி, தாசில்தார் ஜெகதீசன், ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story