எய்ட்ஸ் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி


எய்ட்ஸ் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
x
தினத்தந்தி 3 Sept 2023 12:15 AM IST (Updated: 3 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் எய்ட்ஸ் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது. இதில் ஏராளமான கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் எய்ட்ஸ் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது. இதில் ஏராளமான கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

மாரத்தான் போட்டி

சர்வதேச இளைஞர் தினம் ஆண்டு தோறும் ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி எய்ட்ஸ் விழிப்புணர்வு மற்றும் எச்.ஐ.வி. பரிசோதனையை அதிகப்படுத்துதல், எய்ட்ஸ் நோயாளிகளை ஒதுக்க கூடாது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவர்கள் இடையே மாரத்தான் போட்டி நாகர்கோவிலில் நேற்று நடந்தது.

இதற்கான தொடக்க நிகழ்ச்சி நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன் நடந்தது. கலெக்டர் ஸ்ரீதர் வழிகாட்டுதல்படி சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் மீனாட்சி மேற்பார்வையிட்டார். நிகழ்ச்சிக்கு விளையாட்டு மற்றும் இளைஞர் நல அதிகாரி ராஜேஷ் தலைமை தாங்கினார். எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலுவலக திட்ட மேலாளர் பெடலிக்ஸ் ஷமிலா, நலக்கல்வியாளர் சூரிய நாராயண் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மேற்பார்வையாளர் சிவகுமார் வரவேற்று பேசினார்.

600-க்கும் மேற்பட்ட...

தொடர்ந்து மராத்தான் போட்டியை விளையாட்டு மற்றும் இளைஞர் நல அதிகாரி ராஜேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மராத்தான் ஓட்டம் அண்ணா விளையாட்டு அரங்கம் முன் இருந்து புறப்பட்டு மணிமேடை சந்திப்பு, கோட்டார் போலீஸ் நிலையம், அவ்வை சண்முகம் சாலை, ஒழுகினச்சேரி சந்திப்பு, வடசேரி சந்திப்பு வழியாக மீண்டும் அண்ணா விளையாட்டு அரங்கம் வந்து முடிவடைந்தது.இதில் 600-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவர்கள் பிரிவில் மார்த்தாண்டம் நேசமணி நினைவு கல்லூரி மாணவர் அகில்ராம் முதலிடமும், லயோலா என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பவித் 2-வது இடமும், புனித அல்போன்சா கல்லூரி மாணவர் விஷ்ணு 3-வது இடமும் பெற்றனர். மாணவிகள் பிரிவில் நாகர்கோவில் ஹோலிகிராஸ் கல்லூரி மாணவிகள் ரம்யா, ஹரிஷ்மா, அனிஷா ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்தனர்.

பரிசு

முதலிடம் பெற்றவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரமும், 2-வது இடம் பிடித்தவர்களுக்கு ரூ.7 ஆயிரமும், 3-வது இடம் ெபற்றவர்களுக்கு ரூ.5 ஆயிரமும், சான்றிதழ்களும் பரிசாக வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற மாணவர்கள் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.


Next Story