முப்பெரும் தேவியர் பவானி அம்மன் கோவிலில் ஐப்பசி பூஜை திருவிழா
புளியங்குடி முப்பெரும் தேவியர் பவானி அம்மன் கோவிலில் ஐப்பசி பூஜை திருவிழா நடந்தது
தென்காசி
வாசுதேவநல்லூர்:
புளியங்குடி அரசு மருத்துவமனை அருகில் முப்பெரும் தேவியர் பவானி அம்மன் கோவில், பெரியபாளையத்து பவானி அம்மன், நாக கன்னியம்மன், நாகம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருகிற 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ஐப்பசி மாத மகாபெரும் பூஜை திருவிழா நடைபெறுகிறது.
இதை முன்னிட்டு அதிகாலை 4 மணியளவில் நடை திறக்கப்பட்டு முப்பெரும் தேவியர்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பெரிய தீபாராதனை நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு கோவில் குருநாதர் சக்தியம்மா மகா பெரும் பூஜையில் ஒரு கையில் அக்னி சட்டியுடன் சுமார் 12 மணி நேரம் சிறப்பு அருள் வாக்கு சொல்லுதல் நிகழ்ச்சி நடக்கிறது.
திருவிழா ஏற்பாடுகளை கோவில் குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story