தென்காசி காசி விசுவநாதர் சுவாமி கோவில் ஐப்பசி திருக்கல்யாண தேரோட்டம்


தென்காசி காசி விசுவநாதர் சுவாமி கோவில்  ஐப்பசி திருக்கல்யாண தேரோட்டம்
x
தினத்தந்தி 21 Oct 2022 12:15 AM IST (Updated: 21 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி காசி விசுவநாதர் சுவாமி கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்

தென்காசி

தென்காசி காசி விசுவநாதர் சுவாமி கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.

தேரோட்டம்

தென்காசி காசி விசுவநாதர் சுவாமி கோவிலில் ஐப்பசி மாதம் நடைபெறும் திருக்கல்யாண திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாளை (சனிக்கிழமை) வரை நடைபெறுகிறது.

தினமும் சிறப்பு பூஜைகள், தீபாராதனை, சப்பர வீதி உலா ஆகியன நடைபெற்று வருகின்றன. திருவிழாவின் 9-ம் நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. இதனை முன்னிட்டு அதிகாலையில் உலகம்மன், தேருக்கு எழுந்தருளல் நடைபெற்றது. பின்னர் காலை 9-10 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

மேளதாளம், வாண வேடிக்கை முழங்க பக்தர்களின் பக்தி கோஷங்களுடன் தேர் நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்தது. பின்னர் தேர் காலை 9-50 மணிக்கு நிலையத்தை அடைந்தது.

தபசு காட்சி

நாளை (சனிக்கிழமை) காலை 8-20 மணிக்கு மேல் யானை பாலம் தீர்த்தவாரி மண்டபத்திற்கு அம்பாள் தபசுக்கு எழுந்தருளல் நடக்கிறது. பின்னர் மாலை 6 மணிக்கு மேல் தெற்கு மாசி வீதியில் காசி விசுவநாதர் உலகம்மனுக்கு தபசு காட்சி கொடுத்தல் நடக்கிறது. இரவு 9 மணிக்கு மேல் கோவிலில் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் கவிதா, கோவில் நிர்வாக அதிகாரி முருகன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.


Next Story