திருச்சியை சுற்றி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயிற்சி விமானம்


திருச்சியை சுற்றி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயிற்சி விமானம்
x

திருச்சியை சுற்றி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயிற்சி விமானத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானங்களை மலிண்டோ, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இயக்கி வருகிறது. இதேபோல் உள்நாட்டு விமான சேவைகளாக புதுடெல்லி, ஐதராபாத், பெங்களூரு, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானங்கள் திருச்சி மாநகரை சுற்றி வந்து தரையிறங்குவது வாடிக்கை. இந்த நிலையில் நேற்று ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தின் சார்பில் பயிற்சி விமானம் இயக்கப்பட்டது. விமானிகளுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் இந்த விமானம் இயக்கப்பட்டதாக தெரிகிறது. காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை திருச்சி மாநகரை சுற்றி விமானம் வலம் வந்தது. ஒரே விமானம் பலமுறை திருச்சி மாநகரை சுற்றி வந்ததால் விமானத்தில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டு இருக்கலாமோ? என பொதுமக்களிடையே சந்தேகம் எழுந்தது. இது தொடர்பாக விமானநிலைய வட்டாரத்தில் விசாரித்தபோது, அந்த விமானம் பயிற்சி விமானம் என தெரியவந்தது. காலை முதல் மதியம் வரை திருச்சி மாநகரை பலமுறை விமானம் சுற்றி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story