குறைந்தபட்ச ஊதியம் ரூ.21 ஆயிரமாக அறிவிக்கக்கோரி கள்ளக்குறிச்சியில் எ.ஐ.டி.யு.சி. ஆர்ப்பாட்டம்


குறைந்தபட்ச ஊதியம் ரூ.21 ஆயிரமாக அறிவிக்கக்கோரி    கள்ளக்குறிச்சியில் எ.ஐ.டி.யு.சி. ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 Sept 2022 12:15 AM IST (Updated: 16 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

குறைந்தபட்ச ஊதியம் ரூ.21 ஆயிரமாக அறிவிக்கக்கோரி கள்ளக்குறிச்சியில் எ.ஐ.டி.யு.சி. ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி


கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு எ.ஐ.டி.யு.சி. சார்பில் குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூ.21 ஆயிரம் அறிவிக்கக்கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில நிர்வாக உறுப்பினர் வளர்மதி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ஆண்டாள், தாயபிள்ளை ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் சவுரிராஜன், அப்பாவு ஆகியோர் கண்டன உரையாற்றினர். தமிழ்நாட்டில் குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.21 ஆயிரம் என சட்டப்படி அறிவிக்க வேண்டும், அரசு மற்றும் தனியார் துறைகளில் 240 நாட்களை கடந்து பணிபுரிந்து வரும் நிரந்தரமற்ற தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் கலியபெருமாள், கோவிந்தராஜ், காரல்மார்க்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story