ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்லில் 12 மணி நேரம் வேலை நேரம் மாற்றத்தை கண்டித்து ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திண்டுக்கல்
வேலை நேரத்தை 8 மணியில் இருந்து, 12 மணி நேரமாக உயர்த்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட தலைவர் பாலன் தலைமை தாங்கினார். இதில் சம்மேளன பொதுச்செயலாளர் பாஸ்கர் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தின்போது, 8 மணி நேர வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்திய தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. தொழிலாளர்களுக்கு விரோதமாகவும், முதலாளிகளுக்கு ஆதரவாகவும் சட்ட திருத்தம் செய்யப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதில் ஏ.ஐ.டி.யூ.சி. சங்க உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, அழகர், அருணாசலம், மணிகண்டன் உள்பட பலர் கலந்துகொண்டனர். மேலும் போக்குவரத்து தொழிற்சங்கம், டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் என பல்வேறு சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story