ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட குழு சார்பில் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை அண்ணா சிலை அருகில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி. திருவண்ணாமலை மாவட்டக்குழு சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் முத்தையன் தலைமை தாங்கினார்.
இதில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை தடுக்க வேண்டும். கல்வி மற்றும் சுகாதாரத்தை வணிகமயமாக்கும் நோக்கத்தை கைவிட வேண்டும்.
வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்க வேண்டும். உரம், இடுபொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
இதில் ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story