ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் சாலை மறியல்


ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் சாலை மறியல்
x

வேலூரில் 2 இடங்களில் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் நடந்தது. இதில் 180 பேரை போலீசார் கைது செய்தனர்.

வேலூர்

மத்திய அரசு தொழிலாளர்கள் விரோத கொள்கைகள், 4 சட்ட தொகுப்புகளை கைவிட வேண்டும், தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு முழுவதும் மறியல் போராட்டம் நேற்று நடைபெற்றது. அதன்படி வேலூர் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கங்கள் சார்பில் தலைமை தபால் நிலையம் அருகே முன்னாள் எம்.எல்.ஏ. லதா தலைமையிலும், மக்கான் சிக்னல் பகுதியில் மாவட்ட செயலாளர் சிம்புதேவன் தலைமையிலும் சாலை மறியல் நடைபெற்றது.

இதில் டாஸ்மாக், கட்டிட தொழிலாளர், பீடி தொழிலாளர், போக்குவரத்து, கூட்டுறவு வங்கி, அமைப்புசாரா தொழிலாளர், விவசாயக் கூலி தொழிலாளர், கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள், ஆட்டோ தொழிலாளர், துப்புரவு பணியாளர்கள் சங்க தலைவர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

2 இடங்களிலும் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் சாலையில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 180 பேரை போலீசார் கைது செய்து அந்த பகுதியில் உள்ள மண்டபத்தில் அடைத்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.


Next Story