ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 April 2023 12:15 AM IST (Updated: 22 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம்

விழுப்புரம்

தமிழ்நாடு அரசின் தொழிற்சாலைகள் சட்ட திருத்த மசோதாவை உடனடியாக ரத்து செய்யக்கோரியும், 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக உயர்த்துகிற தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தும் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தின் சார்பில் மாநிலம் முழுவதும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் இன்பஒளி தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சவுரிராஜன் கண்டன உரையாற்றினார். இதில் தொலைத்தொடர்பு துறையின் ஒப்பந்த தொழிலாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் செல்வம், கட்டிட தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ஜெயமலர், கட்டிட தொழிற்சங்க மாவட்ட பொருளாளர் அரசு என்கிற பெரியநாயகம், ஆட்டோ ஓட்டுனர் சங்க மாவட்ட அமைப்பாளர் ஜெய.சவுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story