ஏ.ஐ.டி.யூ.சி சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
சிவகாசியில் ஏ.ஐ.டி.யூ.சி சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர்
சிவகாசி,
தமிழக அரசு 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக திருத்திய சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தின் சார்பில் சிவகாசி பஸ்நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சுமைதூக்கும் தொழிலாளர்கள் சங்க செயலாளர் முனியசாமி தலைமை தாங்கினார். போக்குவரத்து சங்க செயலாளர் முத்துக்குமார், பட்டாசு தொழிலாளர் சங்க தலைவர் கலைவாசகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டுகட்சியின் சிவகாசி வட்டார செயலாளர் ஜீவா, கலைஇலக்கிய பெருமன்ற தலைவர் ஜவகர், போக்குவரத்து சங்க செல்வக்குமார் ஆகியோர் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story