கருவேப்பிலைபாளையம் பேர்கொடி அய்யனாரப்பன் கோவில் கும்பாபிஷேகம்


கருவேப்பிலைபாளையம்    பேர்கொடி அய்யனாரப்பன் கோவில் கும்பாபிஷேகம்
x

கருவேப்பிலைபாளையம் பேர்கொடி அய்யனாரப்பன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழுப்புரம்


திருவெண்ணெய்நல்லூர்,

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள கருவேப்பிலைபாளையம் பரவனந்தல் எல்லையில் பிரசித்தி பெற்ற பேர்கொடி அய்யனாரப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் நடந்து, கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை தொடங்கியது. தொடர்ந்து, நேற்று முன்தினம் காலை 2-ம் கால யாகசாலை பூஜை நடந்து 9 மணிக்கு மேல் கடம் புறப்பாடு நடந்தது. இதில் புனித நீர் அடங்கிய கலசங்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, விமான கலசத்தின் மீது ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பரிவார தெய்வங்களான விநாயகர், நடையம்மன், சப்தகன்னிகள் சாமிகளுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.ஜி.பி. ஞானமூர்த்தி மற்றும் வகையாறாகாரர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்தனர்.


Next Story