'செல்பி' எடுக்க முயன்ற பெண்ணிடம் மறுப்பு தெரிவித்த அஜித்: மன்னிப்பு கேட்டுவிட்டு சென்றார்
சென்னை விமான நிலையத்தில் ‘செல்பி’ எடுக்க முயன்ற பெண்ணிடம் மறுப்பு தெரிவித்த அஜித் மன்னிப்பு கேட்டுவிட்டு சென்றார்.
ஆலந்தூர்,
நடிகர் அஜித், லண்டன் செல்வதற்காக சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையம் வந்தார். அப்போது அஜீத்தை கண்ட பெண் ரசிகை ஒருவர், ஆர்வ மிகுதியால் அவருடன் 'செல்பி' எடுக்க முயன்றார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த அஜீத், அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்டு விட்டு புறப்பட்டு சென்றார். லண்டனில் நடைபெறும் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள அவர் செல்வதாக கூறப்படுகிறது.
முன்னதாக விமான நிலையத்தில் நடிகர் அஜித்தை மத்திய தொழிற்படை போலீஸ் அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்த காட்சிகளை அங்கிருந்த பயணிகள் சிலர் தங்களது செல்போனில் வீடியோ படம் எடுத்தனர். அந்த வீடியோ காட்சிகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர்.
Related Tags :
Next Story