மாணவர்களுக்கு ஆக்கி பயிற்சி
கோவில்பட்டி அருகே பள்ளி மாணவர்களுக்கு ஆக்கி பயிற்சி- இந்திய ஆக்கி அணி முன்னாள் கேப்டன் தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டியை அடுத்துள்ள தெற்கு திட்டங்குளம் பாரதி ஆக்கி மைதானத்தில் பாரதி ஆக்கி கிளப் மற்றும் ராஜீவ்காந்தி விளையாட்டு கழகம் சார்பாக 10 நாள் கோடைகால ஆக்கி பயிற்சி முகாம் நடைபெறுகிறது. தொடக்க விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட ஆக்கி கழக செயலாளர் குரு சித்ர சண்முகபாரதி தலைமை தாங்கினார். அர்ஜுனா விருது பெற்ற முன்னாள் இந்திய ஆக்கி அணி கேப்டன் முகமது ரியாஸ் பயிற்சி முகாமை ெதாடங்கி வைத்து, வீரர்களுக்கு பயிற்சி அளித்தார். முகாமில் 60-க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். கிளப் செயலாளர் சந்தனராஜ் சிறப்பு விருந்தினருக்கு வீரர்களை அறிமுகம் செய்து வைத்தார். உடற்கல்வி ஆசிரியர் ஆனந்த் நன்றி கூறினார். பயிற்சி முகாம் தொடர்ந்து 10 நாட்கள் காலையும், மாலையும் நடைபெறுகிறது.
Related Tags :
Next Story