அகிலாண்டேஸ்வரி கோவில் குடமுழுக்கு


அகிலாண்டேஸ்வரி கோவில் குடமுழுக்கு
x

அகிலாண்டேஸ்வரி கோவில் குடமுழுக்கு நடந்தது

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம், பிள்ளை பெருமாள்நல்லூர் ஊராட்சியில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான அகிலாண்டேஸ்வரி -அபிமுக்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் குலோத்துங்கன் சோழரால் கட்டப்பட்ட கோவில் ஆகும். இங்கு சிவன், பெருமாள் இருவரும் ஒரே இடத்தில் காட்சி அளிப்பதால் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்த கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு நேற்று குடமுழுக்கு நடந்தது. முன்னதாக கடந்த 6-ந் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு நேற்று 4-கால யாக பூஜைகள் முடிவடைந்தது. தொடர்ந்து பூர்ணாகுதி, மகா தீபாராதனை நடைபெற்றது. காலை 9 மணிக்கு யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு மங்கள வாத்தியம் மற்றும் சிவ வாத்தியம் முழங்க கோவிலை வலம் வந்து விமான கலசங்களை அடைந்தன. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் சொல்லி விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு நடத்தினர். இதற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் மற்றும் கிராமமக்கள் செய்திருந்தனர். குடமுழுக்கையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் பொறையாறு போலீசார் ஈடுபட்டனர். 52 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த இந்த குடமுழுக்கு விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.



Next Story